அஜித்62 திரைப்படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்.. உறுதி செய்தது லைக்கா ....
அஜித்62 திரைப்படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்.. உறுதி செய்தது லைக்கா .... வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித், போனிகபூர், வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.. அஜித் 61 வது படத்தில் இணைந்துள்ள இந்தக்கூட்டணி குறித்து புதிய லுக்குடன் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு படத்தை உறுதி செய்துள்ளது. அஜித்துடன் முதன்முதலாக இணைய உள்ளதை அடுத்து தாங்கள் நிறுவனம் பெருமை கொள்வதாகவும் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அஜித்தின் 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,எல்லாம் இனிமேல் நல்லாத்தான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று கூறி இந்த வாய்ப்பை அளித்த லைக்கா நிறுவனத்தின் நன்றியை தெரிவித்துள்ளார்.