அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும்னு சொல்லுவாங்களே அது இதுதான்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கிய ‘ஒத்த’ லாட்டரிச்சீட்டு..!398269429
அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும்னு சொல்லுவாங்களே அது இதுதான்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கிய ‘ஒத்த’ லாட்டரிச்சீட்டு..! கேரளாவில் லாட்டரி குலுக்கலில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக திருவனந்தபுரம் சென்றபோது லாட்டரி வாங்கியதாகவும், அதன் மூலம் தனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாகவும் மருத்துவர் ஆச்சரியம் பொங்க கூறியுள்ளார். தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகாரப்பூர்வமாக கேரளா அரசின் கீழ் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பண்டிகையின்போதும் மெகா பம்பர் குலுக்கல் சீட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான திலீப் நடித்த " கேசு ஈ வீடிண்டே நாதன் " படத்தில் நடந்த சம்பவம் போல் வேறொரு சம்பவம் குமரி மாவட்டத்தில் அரங்கேறியது. படத்தில் முதல் பரிசு பெற்ற சீட்டை தொலைத்து அதை தேடும் சுவாரசியமான சம்பவங்கள் என்றால் நிஜத்தில் விஷு பம்பர் முதல் பரிசு பெற்ற லாட்டரி வாங்கிய நப...