Posts

Showing posts with the label #Punjab | #Gujarat | #IPL2022

குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப்

Image
குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பஞ்சாப் ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் குஜராத் வென்றிருந்தது. அந்த வெற்றியை தொடர வேண்டும் என குஜராத்தும், கடந்த முறை தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் அணியும் களமிறங்கின. டி.ஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியி குஜராத் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக வீரர்களாக சஹாவும், சுப்மன் கில்லும் களமிறங்கி பஞ்சாப் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரி அடித்து அடித்தளத்தை வலுவாக அமைக்க ஆரம்பித்தபோது ரன் அவுட்டில் சுப்மன் கில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுதர்சனோடு சஹா ஜோடி சேர்ந்தார். ஆனால் கில் சென்ற சிறிது நேரத்திலேயே சஹாவும் 21 ரன்களில் நடையை கட்டினார். இதனால் அந்த அணி 4 ஓவர்களுக்கு 34 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து பாண்டியாவும், சுதர்சனும் இணைந்தனர். பாண்டியா வந்த வேகத்திலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன்