மனைவி மீது ஆசிட் வீசி கணவர் தப்பியோட்டம்
மனைவி மீது ஆசிட் வீசி கணவர் தப்பியோட்டம் புதுச்சேரி அடுத்த கொம்பாக்கத்தில் அழகு நிலையத்தில் பணிபுரியும் மனைவி மீது கணவர் ஆசிட் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆசிட் வீசிவிட்டு கனவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அழகு நிலையத்துக்கு வந்த கனவர் கணேசன், மனைவி அழகு மீனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மனைவி மீது அமிலத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.