மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி பள்ளிகளுக்கு விடுமுறை! 1391568948
மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி பள்ளிகளுக்கு விடுமுறை! சென்னை: தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருக்கும் புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டு சமீபத்தில் தான் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 13ம் ஆண்டு தேதியன்று இறுதித் தேர்வு முடிவடைந்தவுடன் கோடை விடுமுறை துவங்கியது. இப்போது பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதியன்றும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதாக கூ...