தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை - வானிலை மையம்


தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை - வானிலை மையம்


வெப்பசலனம் காரணம் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடியமழைபெய்ய வாய்ப்புள்ளதாகவானிலைஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  இன்று (மார்ச் 23)தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.03.2022, 25.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.03.2022, 27.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை: 23.03.2022, 24.03.2022: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

Also read : TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது - அமைச்சர் பிடிஆர் திட்டவட்டம்


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog