ஒரு மணி நேரத்தில் இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா? திருப்பதி தேவஸ்தானம் தகவல்!


ஒரு மணி நேரத்தில் இத்தனை லட்சம் டிக்கெட் விற்பனையா? திருப்பதி தேவஸ்தானம் தகவல்!


ஒரு மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் மார்ச் 21,22,23 ஆகிய 3 நாட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

இதனை அடுத்து நேற்றும் இன்றும் தரிசன டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யபப்ட்ட நிலையில் ஒரு மணி நேரத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் ஏராளமானோர் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் எடுக்க முன்வந்ததாகவும் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது

திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மணி நேரத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆனது புதிய சாதனை என்று கூறப்படுகிறது.

 

Spread the love

Comments

Popular posts from this blog