முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்…! சோகத்தில் ரசிகர்கள்…!


முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்…! சோகத்தில் ரசிகர்கள்…!


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது. சீரியல் குழுவினர் இறுதி நாளில் எடுத்துக் கொண்ட படம் இதனை உறுதி செய்துள்ளது. அதிர்ச்சியாக வேண்டாம் தெலுங்கில் ’வதினம்மா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்….! அப்போ தரமான சம்பவம் இருக்கு…!

4 சகோதரர்களுக்கு இடையில் நடக்கும் பாச நிகழ்வுகள், குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், ஒருவருக்கொருவர் ஜாலியாக பேசி குடும்பத்தை கலகலப்பாக்குவது என சராசரி கூட்டு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

கூட்டு குடும்பத்திற்குள் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற சீரியலாக வலம் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னணி இடத்தில் இருக்கிறது.


கடைக்குட்டிகண்ணன்வீட்டை எதிர்த்து ஐஸ்வர்யாவைகாதல் திருமணம் செய்துக் கொண்டு, சிறிது காலம் கஷ்டப்பட்டு வந்தான். இந்த வருத்தத்தில் இருந்த கண்ணனின் அம்மா லட்சுமி இறந்த பின்னர், குடும்பத்தினர் கண்ணன் ஐஸ்வர்யாவை மன்னித்து ஏற்றுக் கொண்டனர். தற்போது நான்கு அண்ணன் தம்பிகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்து விட்டதாக படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் இது தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அல்ல. தமிழில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு வெர்சனான வதினம்மா தான் நிறைவடைந்துள்ளது. அதிலும் முன்னணி கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal - மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!


Comments

Popular posts from this blog