ஏப்ரல் மாதம் வங்கிகள் விடுமுறை அட்டவணை!


ஏப்ரல் மாதம் வங்கிகள் விடுமுறை அட்டவணை!


மார்ச் மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதன்பிறகு ஏப்ரல் வந்து புதிய நிதியாண்டு தொடங்கும்.

குடி பத்வா, அம்பேத்கர் ஜெயந்தி, பைசாகி பண்டிகைகள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல் 2022க்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதத்தில், வார விடுமுறை உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.

 

விடுமுறை பட்டியல் ஏப்ரல் 2022

*ஏப்ரல் 1 – வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் – (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)
*ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களின் வங்கிகளுக்கு விடுமுறை.
*ஏப்ரல் 3 – ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
*ஏப்ரல் 4 – சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை.
*ஏப்ரல் 5 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை.
*9 ஏப்ரல் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
*ஏப்ரல் 10 – ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
*ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு – ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
*15 ஏப்ரல் – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு – ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
*ஏப்ரல் 16 – போஹாக் பிஹு – கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை.
*ஏப்ரல் 17 – ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
*ஏப்ரல் 21 – கடியா பூஜை – அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன
*ஏப்ரல் 23 – சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
*ஏப்ரல் 24 – ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
*ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா – ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை.

Comments

Popular posts from this blog