தோற்றத்த வச்சி யாரையும் எடை போட கூடாது.. சென்னை பொண்ணு மாதூரி அட்வைஸ்!


தோற்றத்த வச்சி யாரையும் எடை போட கூடாது.. சென்னை பொண்ணு மாதூரி அட்வைஸ்!


கேள்வி: உங்களது திரைப்பயணம் எப்படியிருக்கிறது?

பதில்: நான் மாஸ்டர், சூரரைப்போற்று, பேச்சுலர் போன்ற திரைப்படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய முகபாவனை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றை மையமாக கொண்டு அமைகின்ற கதாபாத்திரங்கள் எனக்கு சந்தோஷத்தை அளித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள அனந்தம் திரைப்படத்திலும் நடித்துள்ளேன் என்றார்.

கேள்வி: ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள அனந்தம் திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இந்த திரைப்படத்தை இயக்குனர் ப்ரியா, பெண்களை மையமாக வைத்து, அவர்களது எமோஷன்களை தெளிவாக வெளிகாட்டியுள்ளார். இத்திரைப்படமானது 8 எபிசோடாக ஜீ5 ஒடிடி தளத்தில் வெளிவருகிறது. அனந்தம் திரைப்படத்தில் என் நடிப்பை மையமாக கொண்டு எனது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நடித்துள்ள யூடியூப் வீடியோ , வெப் தொடர் போன்றவற்றில் எனது பெயரிலேயே நடித்துள்ளேன். இந்த திரைப்படத்தில் தான் முதல்முறையாக சித்ரா என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமாக நடித்துள்ளேன் என்றார்.

கேள்வி: அனந்தம் திரைப்படத்தில் ஒரு வீடு பல எமோசன்களை வெளிப்படுத்தியிருக்கிறது. அது போல் உங்களுக்கு பிடித்த வீடு எது?

பதில்: நான் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் வீடு தான் என்னை கவர்ந்த வீடு. எங்கள் வீடு இருக்கும் ஏரியாவைத் தவிர வேறு எங்கு சென்றாலும் எனக்கு சந்தோஷம் கிடைப்பதில்லை. எல்லோரும் என்னிடம் கேட்பது, உங்களின் ஹேர் ஸ்டைல் போன்றவற்றை பார்க்கும்போது நீங்கள் வெளிநாட்டு பெண்ணா என்று கேட்குகிறார்கள். நான் அவர்களிடம், நான் சென்னை தான் என்பேன் என்றார்.

கேள்வி: நீங்கள் காஸ்ட்யூமை மாற்றி நடித்துள்ளீர்களா?

பதில்: எனக்கு ஸ்டூடண்ட் கதாபாத்திரமே பெரும்பாலும் அமைந்தது. பின்பு விகடனின் வல்லமை தாராயோ வெப் சீரியஸில் காஸ்ட்யூமை மாற்றி நடித்துள்ளேன். இந்த சீரியஸில் ஆரம்பத்தில் இதே ஹேர்ஸ்டைலில் நடித்தேன். பின்னர் நீளமுடியுடன் சேலை கட்டிக் கொண்டு நடித்தேன். காஸ்ட்யூம் முக்கியமில்லை. Performance ஐ மையப்படுத்தி எந்த கதாபாத்திரங்கள் அமைந்தாலும் நான் நடிப்பேன்.

கேள்வி: நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?

பதில்: நான் நன்றி கூற வேண்டுமென்றால் எனது லிஸ்ட் ரொம்ப பெரியது. இந்த தருணத்தில் இயக்குனர் ப்ரியாவிற்கு நன்றி கூற வேண்டும். எனக்கு அனந்தம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியதால் தான், நான் இந்த இடத்தில் நின்று பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/YfDEumql8xw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை மாதூரி வாட்ஸ் இன்னும் பல விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..

Comments

Popular posts from this blog