சமந்தாவின் சொத்து விவரம்… ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் ?
சமந்தாவின் சொத்து விவரம்… ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் ?
அறிமுகப் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து வந்த சமந்தா 2017ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என கருதப்பட்ட நிலையில் தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே மாதிரி பதிவை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரின் பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. ஆனால், பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா மிகவும் ஆபாசமாக நடித்ததுதான் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தாவின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடி எனவும் சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடி எனவும் தகவல் வெளியாகி உள்ளது. நாகசைதன்யாவும் சமந்தாவும் ஒரே படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், நாகசைதன்யாவைவிட சமந்தா அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதனால், சமந்தாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
சமந்தாவும் நாகசைதன்யாவும் ஒன்றாக வாழ்ந்து வந்த வீடு சமந்தாவின் பெயரில் இருந்ததால், நாகசைதன்யா அந்த வீட்டை விட்டு வெளியேறி நாகார்ஜுன் வீட்டில் வசித்து வருகிறார். மேலும், சமந்தாவுக்கு ஹைதராபாத்தில் பல இடங்களில் வீடுகள் மற்றும் நிலங்கள் இருப்பதாகவும், தற்போது சமந்தா மும்பையில் ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டிலாக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
3 கார்களை வைத்திருக்கும் சமந்தா இரண்டு BMW காரும், ஒரு ஜாக்குவார் காரும் வைத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சம்பளத்தையும் சமந்தா கணிசமாக உயர்த்தி உள்ளார். இதனால், விரைவில் அவரின் சொத்து மதிப்பு உயரும் என்று நம்பப்படுகிறது. நாகசைதன்யாவைவிட தனக்கே அதிகமான சொத்து இருப்பதால் தான் சமந்தா, ஜீவனாம்சம் கேட்கவில்லை என்றும், ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment