சைக்கிள் கேப்பில் நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. கவர்னரை சப்போர்ட் செய்து.. ஸ்டாலினுக்கு நறுக் கேள்வி
சைக்கிள் கேப்பில் நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. கவர்னரை சப்போர்ட் செய்து.. ஸ்டாலினுக்கு நறுக் கேள்வி
கன்னம், கழுத்து
இந்த பேனர்களை அகற்ற கூடாது என்று ஆறுமுகம் என்ற நபர், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்ளிட்ட காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு, திடீரென பெண் போலீஸ் என்றும் பாராமல் அவர், மார்க்கரேட் திரேஷாவை கத்தியால் சரமாரியாக தாக்கினார்.. இதில் திரேஷாவுக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் ரத்தம் கொட்டியது.. படுகாயமடைந்த அவரை உடனடியாக சக போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்..
ஆறுமுகம்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் உடனடியாக விசாரணையும் நடத்தினர்.. அப்போதுதான் அந்த பகீர் தகவல் தெரியவந்தது.. சில தினங்களுக்கு முன்பு, மார்க்ரெட் திரேஷி, இதே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தாராம்.. அப்போது ஆறுமுகம் என்பவர் தண்ணி அடித்துவிட்டு பைக்கில் அந்த பக்கமாக வந்துள்ளார்.. இதனால், அவருக்கு அபராதம் விதித்துள்ளார் மார்கரெட் திரேஷி..
பழிக்குப்பழி
இதை மனதில் வைத்து கொண்டுதான், பழிக்குப்பழியாக, நேற்றிரவு டியூட்டியில் இருந்த பெண் போலீஸை, ஆறுமுகம் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைதான் அதிமுக கையில் எடுத்துள்ளது.. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..
எடப்பாடி பழனிசாமி ட்வீட்
அதில், "நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும், காவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள புதிய யுக்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் எனவும், இதற்கும் கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த ட்வீட்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமியும், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்.
தர்மசங்கடம்
இருவருமே அவரவர் விஷயங்களில் இதுவரை உறுதியாக உள்ளனர்.. தினமும் எந்த ஒரு தவறு நடந்தாலும், அதை உடனடியாக கண்டித்து அறிக்கை விட்டு, டேமேஜ் செய்வது தொடர்ந்து வருவது, திமுக தரப்பில் எரிச்சலை கூட்டி வருகிறது.. என்றாலும், தன் கண்காணிப்பில் உள்ள காவல்துறையிலேயே, பெண் போலீசுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி பொதுமக்களிடமும் எழுந்து வருகிறது.
Comments
Post a Comment