சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் சாலைப்பணிகள் குறித்து ஆய்வு - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் சாலைப்பணிகள் குறித்து ஆய்வு - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்


சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அரசு கொறடா கோவி செழியன், கும்பகோணம் செல்லும் சாலை விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, ஒருவழிச்சாலைகளை இருவழிச்சாலைகளாக்க வேண்டும், இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக்க முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து கும்பகோணத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற போது முதலமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தது. திருவண்ணாமலையில் 20 இலட்சம் ஆன்மிக பெருமக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

உடனடியாக  சாலைப்பணிகள் ஆய்வை ரத்து செய்துவிட்டு திருவண்ணாமலை சென்றதாகவும், எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக பெருமக்கள் சிறப்பாக சித்ரா பவுர்ணமியை கொண்டாடினார்கள் என்றும் கூறியதுடன், கூட்டத்தொடர் முடிந்தவுடன் கும்பகோணத்திற்கு ஆய்வுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Comments

Popular posts from this blog

Lemon Cream Cheese Bars

The Best Furniture Trends to Expect in 2020 #Furniture