20 ஆண்டுகளை கடந்து ஆச்சரியப்படுத்தும் த்ரிஷா.. கொண்டாட்டத்துக்கு தயாராகும் பிரபலங்கள்
20 ஆண்டுகளை கடந்து ஆச்சரியப்படுத்தும் த்ரிஷா.. கொண்டாட்டத்துக்கு தயாராகும் பிரபலங்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் த்ரிஷா. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை இவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிக்க வந்து இருபது ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்த இளமை மாறாமல் பலரையும் ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்கிறார். என்ன த்ரிஷா நடிக்க வந்து 20 ஆண்டுகள் முடிஞ்சிடுச்சா என்று பலருக்கும் தோன்றலாம்.
மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதற்கு முன்பே அவர் ஜோடி திரைப்படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்திருந்தாலும் மௌனம் பேசியதே திரைப்படம் தான் அவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.
அந்த வகையில் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கிய இவருடைய திரைப்பயணம் தற்போது 20 ஆண்டுகளை எட்டியுள்ளது. சினிமாவில் பல நடிகைகள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் ஹீரோயினாக 20 ஆண்டுகள் கடந்து வருவது பெரிய விஷயம்தான். அந்த வரிசையில் திரிஷா தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளார்.
தற்போது இந்த சாதனையை பிரம்மாண்டமாக கொண்டாடுவதற்கு த்ரிஷாவின் நெருங்கிய நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்கள் ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா போன்ற நடிகைகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர். அவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த விழாவை 80களில் நடித்த நடிகர், நடிகைகள் கொண்டாடிய விழாவை போல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த விழாவை சென்னையில் நடத்தலாமா அல்லது கோவாவில் நடத்தலாமா என்ற ஒரு ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் நடக்க போகும் இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதேபோன்று திரிஷா சினிமாவில் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
Related Topics:சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், த்ரிஷா, நடிகர்கள், நடிகைகள், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன்
Comments
Post a Comment