இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸுடன் (23 வயது, 5வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (34 வயது, செர்பியா), அதிரடியாக விளையாடி முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். ஆனால், 2வது செட்டில் சிட்சிபாஸ் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. அதில் ஜோகோவிச் 7-6 (7-5) என வென்று 6வது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டில் ஜோகோவிச் பெறும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிபி மாஸ்டர்ஸ் 1000...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment