வெற்றிமாறனுக்கு கால்ஷீட்டை கொடுக்க மறுக்கும் சூர்யா.. மீண்டும் உருவாகும் சர்ச்சை கூட்டணி


வெற்றிமாறனுக்கு கால்ஷீட்டை கொடுக்க மறுக்கும் சூர்யா.. மீண்டும் உருவாகும் சர்ச்சை கூட்டணி


சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சூர்யா தற்போது பாலாவுடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

இப்படத்தில் சூர்யா படகோட்டியாக நடிக்கிறார். இப்படத்திற்கு முன்னதாகவே சூர்யா வெற்றிமாறனுடன் ஒப்பந்தமானார். இப்படத்திற்கு வாடிவாசல் என்று பெயர் வைக்கப்பட்டு ப்ரீ புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வந்தது. ஆனால் தற்போது வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் வனப்பகுதியை சுற்றி படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். விஜய் சேதுபதியின் கால்ஷீட் பிரச்சனையால் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

தற்போது மீண்டும் விடுதலைப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட உறுதி செய்துள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக உள்ளதால் வேறு ஒரு இயக்குனருக்கு சூர்யா கால்ஷீட் கொடுத்துள்ளார்.

அதாவது மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் உடன் மீண்டும் கூட்டணி போடயுள்ளார். ஜெய்பீம் படத்தை தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் சூர்யா தயாரித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு வழக்கறிஞர் சந்துரு என்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஜெய்பீம் படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து சர்ச்சைகள் எழுந்தாலும் முதல்வர் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் சூர்யா, ஞானவேல் இணைய உள்ளதால் இப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Related Topics:, , , , , , , , , , , , ,

Comments

Popular posts from this blog