கல்யாணம் வரைக்கும் பொறுக்க முடியலயா….? மஜா பண்ணும் விக்கி- நயன்…!
கல்யாணம் வரைக்கும் பொறுக்க முடியலயா….? மஜா பண்ணும் விக்கி- நயன்…!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களின் திருமணத்தை தான் ரசிகர்கள் ஆர்வத்துரன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருகிற ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரௌடி தான்’ படத்தில் இருந்தே இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட 6 வருடமாக காதலித்து வரும் இவர்கள் அடிக்கடி வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வெளியில் செல்வதும் மட்டுமில்லாமல் அங்கு எடுக்கும் புகைப்படங்களை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர்.
பகிரும் போதெல்லாம் ரசிகர்களின் ஒரே கேள்வி உங்கள் திருமணம் எப்போது என்பது தான். ஆனால் அந்த நேரத்தில் இருவரும் அதை மறுத்தும் வந்தனர். நண்பர்களாக பழகுகிறோம் என்றெல்லாம் கூறி வந்தனர். மேலும் சில சமயங்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். பெரும்பாலும் மிகவும் பிரபலமான கோவில்களில் இந்த ஜோடியை பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தின நாளில் தான் இருவரும் திருப்பதி சென்று கல்யாண தேதியை குறித்து சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் மகாபலிபுரம் சென்றுள்ளனர். அங்கு உள்ள பிரபலமான ரெஸ்டாரன்டில் கடல் சார் உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment