ஆண்டவர் முன்னிலையில் விஜய்யை புகழ்ந்த வலிமை பட டிஸ்ட்ரிபியூட்டர்.. மேடையை அதிர விட்ட ரசிகர்கள்


ஆண்டவர் முன்னிலையில் விஜய்யை புகழ்ந்த வலிமை பட டிஸ்ட்ரிபியூட்டர்.. மேடையை அதிர விட்ட ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறது. அதிலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இதுவரை எந்த தமிழ்த் திரைப்படமும் வசூலிக்காத அளவுக்கு வசூல் சாதனை செய்து மாஸ் காட்டியது. இந்த செய்தியை பைனான்சியர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான அன்புச்செழியன் ஒரு மேடையில் புகழ்ந்து பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் படக் குழுவினர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது விழா மேடையில் பேசிய அன்புச்செழியன் தமிழ் சினிமாவில் பல கோடி வசூலை வசூலித்து பலருக்கும் லாபம் கொடுத்த ஒரே திரைப்படம் மாஸ்டர் என்று கூறினார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய்சேதுபதி கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று உலக நாயகனுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் வேட்டை புரியும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் பாராட்டி பேசினார். தற்போது அவர் பேசியிருக்கும் அந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் பல கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருந்தனர். தற்போது அன்புச்செழியன் மாஸ்டர் திரைப்படம் பற்றி கூறியிருக்கும் இந்த தகவல் அவர்களை குஷிப்படுத்தி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Related Topics:, , , , , , , , , ,

Comments

Popular posts from this blog

3 வருட காதலி தன்னை கண்டு கொள்ளாததால் சென்ட்ரிங் கம்பியால் அடித்து கொலை செய்த காதலன்! போலீஸ் வலைவீச்சு!!1136120000

The Crew from Fox Soul s The Mix Share How They Keep Their Mind Body and Soul Satisfied #Mind

இறந்த கணவன், அம்மா சடலங்களை வீட்டிலேயே வைத்திருந்த பெண்!!1619824394