32 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம்!! சாதனை படைத்த சுராஜ் வஷிஷ்த்!!196321834


32 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம்!! சாதனை படைத்த சுராஜ் வஷிஷ்த்!!


இத்தாலி நாட்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த், ஐரோப்பிய சாம்பியனான பரைம் முஸ்தபாயேவ் உடன் விளையாடினார்.

இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சுராஜ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை இந்திய வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்றவர் என்ற பெருமையையும்  தேடித் தந்துள்ளது.

1990ம் ஆண்டு பப்பு யாதவ் வெற்றிக்கு பிறகு  சுராஜ் தங்கம் வென்றுள்ளார்.  17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இது 3வது பதக்கம் ஆகும். அனைத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இது 4வது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog