கங்கை அம்மன் கோவிலில் அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !!1574798140


கங்கை அம்மன் கோவிலில் அந்தரத்தில் பறந்து வந்து சாமிக்கு மாலை !!


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. 

அதனைத்தொடர்ந்து பல்வேறு வேடமிட்டும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு அறுவடை எந்திரம், பொக்லைன் எந்திரம், வேன், சாமி தேர் ஆகியவைகளை இழுத்து வந்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு சென்று அம்மனுக்கு பரவசத்துடன் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர். விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்த கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog