“பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” - சசிகலா பேட்டி485467861
“பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணையும்” - சசிகலா பேட்டி
பிளவுகளை கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சி உருவாகும் மதுரை விமான நிலையத்தில் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த வி.கே.சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய சிறு காலத்திலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போதைய அதிமுகவில் இருக்கும் பிளவுகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சசிகலா, "பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்" என்றார்.
Comments
Post a Comment